Entertainment
ஹிந்தியில் இயக்குனராக அறிமுகமாகும் ரஞ்சித்
தமிழில் கபாலி, காலா போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக புகழ்பெற்றவர் இயக்குனர் ரஞ்சித். ரஞ்சித் படங்கள் என்றாலே எப்போதுமே ஒரு பக்கம் தீவிர ஆதரவும் ஒரு பக்கம் தீவிர எதிர்ப்பும் இருக்கும் இந்த நிலையில் ரஞ்சித் தற்போது ஹிந்தியில் ஒரு பயோபிக் படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கவுள்ளதாக தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இந்த திரைப்படம் 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களிடமும் மற்றும் உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காகப் போராடிய ஜார்கண்ட் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையமாக கொண்டது.
