ஹிந்து தெய்வங்களில் மிக உக்கிர தெய்வமாக கருதப்படுவது பிரத்யங்கிரா தேவி . பிரத்யங்கிராவிடம் நாம் வேண்டும் வரங்கள் உடனடியாக நடக்கும் என்பது நம்பிக்கை.
ஓசூர் மோரணப்பள்ளி என்ற இடத்தில் பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. அதர்வண வேதத்தில் வரும் பிரத்யங்கிரா தேவி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்பட்டு இவளுக்கு மிளகாய் யாகம் அமாவாசையன்று பெரும்பாலான கோவில்களில் செய்யப்படும். அப்படியான பிரத்யங்கிரா தேவியை சசிகலா ஓசூர் மோரணப்பள்ளி கோவில் சென்று வழிபட்டுள்ளார்.
எதிரிகளை அழிக்க உகந்த தெய்வம் பிரத்யங்கிரா. ஜெயிலில் இருந்து வந்த உடனேயே அரசியல் எதிரிகளை வெல்ல பிரத்யங்கிராவை வழிபட்டு இருப்பாரோ என அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விமர்சிக்கப்படுகிறது.