cinema news
பிறைசூடன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
தமிழ் திரையுலகில் 400 படங்களில் 1400க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்தவராவார். இவர் எழுதி வெற்றி பெற்ற பாடல்கள் பெரும்பாலும் புகழ்பெற்ற பாடல்களேயாகும்.
இந்நிலையில் பிறை சூடன் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ள முதல்வர் ஸ்டாலின். எங்க ஊர்க்காரர் என் உடன்பிறப்பு என தலைவர் கலைஞரால் புகழப்பட்டவர் பிறைசூடன் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து காலத்தால் அழியாத பல பாடல்களை எழுதிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகத்துக்கு பெரும் பேரிழப்பாகும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என ஸ்டாலின் கூறியுள்ளார்