ஊரடங்கு அலப்பறைகள்: இணையத்தில் வைரலாகும் பில்லோ சேலஞ்ச்!

ஊரடங்கு அலப்பறைகள்: இணையத்தில் வைரலாகும் பில்லோ சேலஞ்ச்!

ஊரடங்கில் வீட்டில் இருப்பவர்கள் தங்கள் பொழுதைப் போக்க நூதனமாக பல ஐடியாக்களைக் கண்டுபிடித்து செயல்படுத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 22 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கிட்டதட்ட அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்துள்ளன. இதன் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் நண்பர்களுடனும் சக மனிதர்களுடனும் தொடர்பில் இருப்பதற்கு சமூகவலைதளங்களே ஒரே வழியாக உள்ளன. இந்நிலையில் தினமும் ஏதாவது ஒரு சேலஞ்சை உருவாக்கி அதன் மூலம் பொழுதுபோக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

கொரோனாவால் அதிமாக பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களோ பில்லோ சேலஞ்ச் என்ற ஒன்றை அறிமுகப்படுத்த அது இப்போது இந்தியாவுக்கும் பரவ ஆரம்பித்துவிட்டது. உடலில் எந்த ஆடையும் இல்லாமல் தலையணைகளை மட்டுமே பயன்படுத்தி உடலை மறைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் அப்லோட் செய்யவேண்டும்.

அதன் பின்னர் அதே போல செய்ய சொல்லி தமது நண்பர்கள் யாரையாவது சேலஞ்ச் செய்யவேண்டும். இதனை இந்திய நடிகைகள் சிலரும் ஏற்றுக்கொண்டு புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.