திருச்சியில் பிரபல லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் பல கோடி மதிப்புடைய நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது லலிதா ஜூவல்லரி நகை கடை. இந்த கடை கீழ் மற்று மேல் தளம் என 2 தளங்களில் செயல்படுகிறது.
அந்த கடையில் நேற்று இரவு புகுந்த கொள்ளையர்கள் கீழ்தளத்தில் உள்ள பல கோடி மதிப்புடையை நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அந்த நகைகளின் மதிப்பு ரூ.50 இருக்கலாம் என கூறப்படுகிறது.
நகை கடையின் பின்புறம் உள்ள கல்லூரி மைதானத்தின் வழியாக அவர்கள் வந்து, சுவற்றை ஓட்டையிட்டு நள்ளிரவு ஒரு மணியளவில் அவர்கள் உள்ளே வந்துள்ளனர்.
மோப்பநாய் தங்களை கண்டுபிடித்துவிடக்கூடாது என கொள்ளையர்கள் மிளகாய் பொடியை அங்கு தூவி சென்றுள்ளனர். முகமூடி அணிந்து அவர்கள் நடந்து செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு திருச்சி போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், அவர் சுவற்றில் ஓட்டு போட்டு எப்படி நுழைந்தனர், எந்த நகையெல்லாம் எடுத்தனர் உள்ளிட்ட சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில், நகைகள் வைக்கப்பட்டிருந்த ஏராளமான பெட்டகங்கள் காலியாக இருப்பது பதிவாகியுள்ளது.