Latest News
போன் ஃபே மூலம் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்
பொதுவாக பிச்சை எடுப்பவர்களுக்குத்தான் பணம் அதிகம் கொட்டுகிறது என பொதுவாகவே ஒரு கருத்து உண்டு.
சில பிச்சைக்காரர்கள் பணத்தை அதிகம் சேர்த்து வைத்திருப்பார்கள். மூடையாக கட்டிவைத்திருப்பார்கள் என்றாவது யாராவது சோதனையிடும்போது லட்சம் லட்சமாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு செய்திகளில் வந்திருப்பதை பார்த்து இருப்பீர்கள்.
பல வருடங்களுக்கு முன்பே பிச்சைக்காரர்கள் சங்கம் எல்லாம் வைத்தார்கள் என்று காமெடி கூட சத்யராஜ் நடித்த உடன் பிறப்பு படத்தில் கவுண்டமணி செய்திருப்பார்.
தற்போது டிஜிட்டல் யுகம் என்பதால் ஒரு பிச்சைக்காரர் போன் ஃபே மூலம் பிச்சை எடுத்து வருகிறார்.
இங்கல்ல பீகாரில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
சில்லறை இல்ல என்றால் ஃபோன் ஃபே மூலம் அந்த பிச்சைக்காரர் பணம் அனுப்ப சொல்கிறார்.
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
