பைசர் நிறுவனத்தின் மிகப்பெரும் உதவி

13

உலகின் முன்னணி பார்மா நிறுவனம் பைசர்,இது இந்தியாவுக்கு கரோனா நிவாரண உதவியாக ரூ.510 கோடியை வழங்கியுள்ளது.

இது பைசர் நிறுவன வரலாற்றில் வழங்கப்பட்ட மிகப்பெரிய நிவாரண முயற்சி இதுதான் என்று அந்நிறுவன தலைவர் ஆல்பர்ட் போர்லா கூறியுள்ளார்.

இந்தியாவில்  கரோனா பரவல்கவலை அளிக்கிறது. இந்தியர்கள் நலனில் எங்களுக்கு அக்கறை உள்ளது. இந்தியா கரோனா நெருக்கடியில் இருந்து மீண்டுவர பைசர் கைகோர்க்க தயாராக இருக்கிறது.

பைசர் நிறுவனத்தின் வரலாற்றில் இது மிகப்பெரிய நிவாரண முயற்சியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது’’ என்று ஆல்பர்ட் போர்லா கூறினார்.

அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பைசர் நிறுவனத்தின் விநியோக மையங்களிலிருந்து மருத்துவ உதவிகள் அனுப்பப்படுகின்றன. இந்த உதவிகள் நாடுமுழுவதுமுள்ள பொது மருத்துவமனைகளில் மருந்து தேவைப்படுகிற கரோனா நோயாளிகளுக்கு இலவசமாக சென்றடைய வேண்டும் என்பதுதான் பைசர் நிறுவனத்தின் திட்டம் என்றும் போர்லா கூறினார். இந்திய அரசு மற்றும் என்ஜிஓ அமைப்புகளின் உதவியால் எங்கெல்லாம் மருந்துகளின் தேவை உள்ளது என்பதை அறிந்து விநியோகம் செய்யும் முயற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

பாருங்க:  தனுசில் இருந்து மகரத்திற்கு மாறிய சனீஸ்வரர்
Previous articleஆறுதல் செய்தி- கொரோனா தொற்று குறைகிறது
Next articleஅம்மா உணவகம் தாக்குதல் – நடவடிக்கை எடுத்த ஸ்டாலின்