Latest News
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு- மக்கள் கருத்து என்ன
இந்தியாவில் நாளுக்கு நாள் ஏறி வந்த பெட்ரோல் டீசலின் விலையால் மக்கள் பெரிதும் அவதியுற்றனர். வாடகை வாகன் ஓட்டுனர்கள் தங்கள் கஸ்டமர்களிடம் நியாயமான வாடகையை கூட கேட்டு பெற முடியாத சூழ்நிலை இருந்தது. அது போல விலைவாசியும் கடுமையாக உயர்ந்தது.
பெட்ரோல் லிட்டருக்கு 110 ரூபாயை கடந்தும் டீசல் லிட்டருக்கு 100 ரூபாயை கடந்தும் விற்பனையானது இது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த தவறவில்லை.
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையை அதிரடியாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் படி பெட்ரோல் விலை குறைந்து 102 ரூபாய்க்கும், டீசல் விலை குறைந்து 94 ரூபாய்க்கும் இன்று முதல் விற்கப்படுகிறது. பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளதன் மூலம் இவை விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொதுமக்களின் கருத்து என்னவென்றால் தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியினை குறைக்க வேண்டும் அதன் மூலம் பெட்ரோல் டீசல் மீதான விலை இன்னும் கட்டுக்குள் வரும் எனவும் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
