Latest News
பெட்ரோல் மற்றும் கரண்ட் இல்லாமல் தவிக்கும் இலங்கை மக்கள்- இலங்கையின் பெருந்துயரம்
எப்போதுமே துயரங்கள் மிகுந்த நாடாகவே இலங்கை இருந்து வருகிறது. கடந்த பல வருடங்களாகவே போர், மற்றும் உயிரிழப்புகள் இலங்கையில் அதிகம்.
இந்த நிலையில் போர் போன்ற சூழல்கள் எல்லாம் கடந்த 2009டன் முடிவுற்று இலங்கை இயல்பான நாடாக வளர்ச்சி பாதையில் பயணித்து வந்தது.
இந்த நிலையில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட வேலை நெருக்கடிகள் லாக் டவுன் பிரச்சினைகளால் பொருளாதார ரீதியாக ஏற்பட்ட நெருக்கடிகளை அந்த நாட்டு அரசு சரிவர கையாளவில்லை அதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளது.
சில மாதங்களாக மின்சார தட்டுப்பாடு அங்கு ஏற்பட்டு வந்த நிலையில் அதையும் சரிவர கையாளாத காரணத்தால் தற்போது ஒரு நாளில் பாதி நேரம் மின்சாரம் இல்லாத சூழல் நிலவுகிறது.
இதனால் இலங்கை மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் வாடுகின்றனர். இந்த நிலையில் அங்கு பெட்ரோல் டீசல் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
பெட்ரோல் டீசலை சரிவர அந்த நாட்டு அரசு கொள்முதல் செய்யாததால் அங்கு பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசலுக்கு மிக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை மக்களின் மிக இருண்ட காலமாக இது பார்க்கப்படுகிறது.
