உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வருவதால் அங்கு மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பலர் அங்கு மாட்டிக்கொண்டு தவித்து வருகின்றனர்.
அவர்கள் சிறிது சிறிதாக இந்திய விமானங்கள் மூலம் அங்கிருந்து அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில் பல மாணவ மாணவிகள் அங்கு சென்றிருந்த இடத்தில் வளர்ப்பு பிராணிகளான நாய் , பூனை இவைகளை வளர்த்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு மாணவர் கூட தான் வளர்த்த தெரு நாயை அங்கு விட்டு வர விடாமல் தவித்தார்.
இப்படி பல மாணவ மாணவிகள் தங்களது வளர்ப்புகளை விட்டு வர முடியாமல் தவித்தனர்.
இந்த நிலையில் இந்தியாவுக்கு வரும் மாணவர்கள் தங்களது வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு வர அரசு அனுமதித்துள்ளது.
சமீபத்தில் வந்த விமானங்களில் வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை போன்றவற்றையும் அவர்கள் அழைத்து வந்துள்ளனர்.