Entertainment
பேசும்படத்துக்கு இன்று 34 வயது
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1987ம் ஆண்டு வந்த படம் பேசும்படம்.இது ஹிந்தியில் புஷ்பக் என்ற பெயரில் வெளியாகி வெற்றிபெற்றது. கமல்ஹாசனின் வித்தியாசமான முயற்சியாக இப்படத்தில் அந்தக்கால ஊமை படம் போல எந்த வசனமும் இல்லாமல் வந்த படம்.
படத்தின் இயக்குனர் கமலை வைத்து அபூர்வ சகோதரர்கள்,மைக்கேல் மதனகாமராஜன், உள்ளிட்ட படங்களை இயக்கிய சிங்கிதம் சீனிவாசராவ் அவர்கள்.
கமல், அமலா நடித்து இருந்த இந்த படம் தமிழில் பெரிய சக்ஸஸ் இல்லை என்றாலும் காலம் கடந்தும் நினைவில் நிற்கிறது.
படத்தின் பெரும்பலம் இளையராஜா. அவரின் பின்னணி இசைதான் படத்தை உயர்த்தியது. ஏனென்றால் படத்தில் வசனமே இல்லாதபோது பின்னணி இசையை மட்டும் சிறப்பாக கொடுத்து அந்த படத்தின் தரத்தை உயர்த்தியவர் இளையராஜா.
இன்றுடன் இப்படம் வெளியாகி 34 ஆண்டுகள் ஆகிறது.
