இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பச்சை மண்டலங்களில் பேருந்துகள் 50 சதவீதம் இயக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஊரடங்கை மத்திய உள்துறை அமைச்சகம் மே 17 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஏற்கனவே அறிவித்த ஊரடங்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35,000 ஐ தாண்டியுள்ளது. நாளுக்கு நாள் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், மத்திய அரசு. கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதித்துள்ளது. அதில், பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும் சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ, கார் இயக்கத்தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பேருந்து சேவை…. பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துகளை இயக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தின் ஒரே பச்சை மண்டல மாவட்டமான கிருஷ்ணகிரியில் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிகிறது.