முடிந்தால் பெரியாரை தொட்டுப்பாருங்கள்- நேரு சவால்

21

கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் கே.என் நேரு. இவர் திருச்சி மாவட்டத்தின் தொகுதிகளில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகி அமைச்சருமானவர்.

கடந்த திமுக ஆட்சியில் திருச்சியில் கே.என் நேருவும் அவரது தம்பி ஜெயத்தின்மீதும் அதிகமான நில அபகரிப்பு புகார்கள் சொல்லப்பட்டன.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை திறந்து வைத்தவர்கள் பெயர் கல்வெட்டில் இருக்கும் அதில் கே.என் நேருவின் பெயரும் இருக்கும்.

இந்நிலையில்

திருச்சி இனாம் குளத்தூரில் அவமதிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு, திமுக முதன்மைச் செயலாளர் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு சிலர் கட்சி வளர்ப்பதாக எண்ணி, திராவிட இயக்க தலைவர்கள் மீது பொய்யான பிரச்சாரம் செய்து, பெரியார் சிலையை சேதப்படுத்துவதுவதாக கூறினார். பெரியார் சிலை அவமதிப்புகளை தடுக்க, தொடக்கத்திலேயே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருந்தால், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து இருக்காது என்று கூறினார். திமுக ஆட்சியில் இருக்கும் போது, முடிந்தால் பெரியாரை அவர்கள் தொட்டு பார்க்கட்டும் என்று கே.என்.நேரு சவால் விடுத்தார்.
பாருங்க:  ஞானவேல் ராஜாவிடம் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை - கமல்ஹாசன் மறுப்பு