நீண்ட போராட்டத்துக்கு பின் பேரறிவாளன் விடுதலை

நீண்ட போராட்டத்துக்கு பின் பேரறிவாளன் விடுதலை

கடந்த 1991ம் ஆண்டு சென்னை ஸ்ரீபெரும்புதூருக்கு அரசியல் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலை புலிகளால் கொல்லப்பட்டார். இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி விடுதலை புலிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் கொலை செய்தனர்.

மனித வெடிகுண்டாக மாறி தனு என்பவர் கொலை செய்தனர். முக்கிய காரணமாக இருந்த சிவராசன் சுபா, போன்றோரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர்கள் அதே வருடமே பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த நிலையில் கொலைக்கு உதவியதாக பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன், உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இருந்தாலும் 30 ஆண்டுகளுக்கு மேல் இவர்கள் ஜெயிலில் இருந்து வருவதை எதிர்த்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மத்திய மாநில அரசுகளை சந்தித்து பேசி வந்தார் இருப்பினும் எதுவும் பலனளிக்கவில்லை. மூன்று வருடம் முன்பே பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்து கவர்னர் முடிவெடுத்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில் விடுதலை குறித்து கவர்னர் முடிவெடுக்காமல் கவர்னர் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. மேலும் விடுதலை மனுவை கவர்னர் பரிசீலிக்க உச்சநீதிமன்றமே ஒப்புதல் கொடுத்திருந்த நிலையில் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் மனுவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி இருக்கிறார் கவர்னர். இது போல விசயங்களை கண்டித்த உச்சநீதிமன்றம் இன்று பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது.