Connect with us

பேரறிவாளன் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல- அண்ணாமலை

Latest News

பேரறிவாளன் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல- அண்ணாமலை

கடந்த 1991ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டாக மாறி விடுதலை புலிகள் இயக்கத்தினர் கொலை செய்தனர்.

மனித வெடிகுண்டு என்பதே இந்தியாவுக்கு புதிதாக தெரிந்தது. கொலை வழக்கில் நேரடி சம்பந்தப்பட்டவர்களான தனு போன்றோர் ஸ்பாட்டிலேயே இறந்து விட்ட நிலையில், மீதமிருந்த சிவராசன், சுபா போன்றோரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுவிட்டனர்.

இக்கொலைக்கு பல வகையிலும் உதவியாக செயல்பட்ட பேரறிவாளன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு மரண தண்டனை கொடுக்கப்பட்டது. பின்பு அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

இருப்பினும் 30 ஆண்டுகளுக்கும் மேல் பேரறிவாளன் விடுதலை செய்யப்படாததால் நேற்று முன் தினம் விடுதலை செய்யப்பட்டார். ஆளும் திமுக அரசே பேரறிவாளனுக்காக உச்சநீதிமன்றத்தில் போராடியது என்று சொல்லலாம்.

இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இது தவறானதாகும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம் ஆனால் இது கொண்டாடக்கூடிய தீர்ப்பு அல்ல. காங்கிரஸ்காரர்களுக்கு திராணி இருந்தால் இந்த விசயத்தில் திமுக கொண்டாடி வருவதை எதிர்த்து திமுக கூட்டணியை விட்டு விலகட்டும் என கூறி  உள்ளார்.

பாருங்க:  இப்படிலாம் கவிதை எழுதி ப்ரபோஸ் பண்ணுவாங்களா?- ஜிவி பிரகாசுக்கு கவிதை எழுதி ப்ரபோஸ் செய்த ரசிகை

More in Latest News

To Top