Latest News
பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்
கடந்த 1991ம் ஆண்டு சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வெடிகுண்டு வைத்து விடுதலை புலிகளால் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக தமிழகத்தை சேர்ந்த பேரறிவாளன் கைது செய்யப்பட்டார்.
இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுவதால் இவரது அம்மா அற்புதம்மாள் இவரை விடுதலை செய்ய அடிக்கடி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வந்தார்.
ஆனால் தற்காலிக பரோல் மட்டும் இவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் நீண்ட போராட்டத்துக்கு பின் உச்சநீதிமன்றம் இன்று இவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இவர் மாதா மாதம் ஜோலார் பேட்டை காவல் நிலையத்தில் சென்று ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
