Connect with us

கம்பரின் ஜீவசமாதியில் இயக்குனர் பேரரசு

cinema news

கம்பரின் ஜீவசமாதியில் இயக்குனர் பேரரசு

கவிச்சக்கரவர்த்தி கம்பர் திருவெண்ணெ நல்லூரில் வாழ்ந்தாலும் . கடைசி காலத்தில் சோழ மன்னன் ஒருவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் அப்படியே தேசாந்திரமாக வந்து சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் வாழ்ந்தார்.

இறுதி காலத்தில் அங்குள்ள ஆவிச்சி செட்டியார் தோட்டத்தில் வாழ்ந்தவர் அங்கேயே ஜீவசமாதியடைந்தார்.

அங்கேயே கம்பருக்கு ஜீவசமாதி உள்ளது. கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதால் கம்பர் சமாதி மண் எடுத்து சிறு குழந்தைகளுக்கு நாக்கில் வைத்தால் சரியாக பேச வராத சிறு குழந்தைகளுக்கு சீக்கிரம் பேச்சு வந்து விடும் என்பது நம்பிக்கை.

இயக்குனர் பேரரசுவின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையாகும் அங்கு சென்றுள்ள பேரரசு கம்பர் சமாதியில் தியானம் செய்தார்.

அதை புகைப்படமாக வெளியிட்டுள்ளார் அவர்.

More in cinema news

To Top