புகார்களை அடுக்கிய பொதுமக்கள் ; திணறிய உயதநிதி : கிராம சபையில் பரபரப்பு!

582

கிராம சபை கூட்டத்தில் திமுகவினருக்கு எதிராக பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நடிகரும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதி திணறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் திமுக மக்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகமெங்கும் கிராம சபை கூட்டங்களை திமுக நடத்தி வருகிறது. இதில், ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டு வருகின்றனர். அந்த பிரச்சனைகளுக்கு திமுக ஆட்சியில் தீர்வு காணப்படும் என அவர்கள் மக்களிடம் வாக்குறுதி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் வத்தலகுண்டு பகுதியில் நடத்தப்பட்ட கிராமசபையில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, அவர் எதிர்பார்க்காத வண்னம் அந்த பகுதிமக்கள் பலரும் திமுகவிற்கு எதிராக பல புகார்களை கூறினர். பல வருடங்களாக திமுகவிற்கு வாக்களித்தும் இன்னும் தங்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என பலரும் கூறினார்.

அதேபோல், திமுக ஆட்சி காலத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை திமுக பிரமுகர் ஒருவர் அபகரித்துக் கொண்டதாக ஒரு மூதாட்டி புகார் கூறினார். இப்படி பலரும் புகார் கூற, ஒரு கட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மைக்கை பிடிங்க திமுகவினர் முயன்றனர். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து புகார் கூறிக்கொண்டே இருக்க அவர்களுக்கு பதிலளிக்க முடியாமல் உதயநிதி திணறினார்.

இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாருங்க:  இன்றும் நாளையும் 11 மாவட்டங்களில் வெப்பக்காற்று!
Previous articleஆர்யா – சாயிஷா திருமணம் உண்மை அல்ல – அபர்ணதி!
Next articleகாம கொடூரத்தின் உச்சம் – மயக்க ஊசி செலுத்தி 4 வயது சிறுமியை நாசம் செய்த வேன் ஓட்டுனர்!