தமிழகத்தில், 43 நாட்களுக்கு பிறகு பல்வேறு சட்டப்போரட்டங்களுக்கு சந்தித்து தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி அளித்துள்ளது. 7 நாட்களுக்கு 7 வண்ணங்களில் டோக்கன் முறையில் மதுபானம் விற்கப்பட்டு வருகின்றது. எந்தெந்த நாட்களில் எந்த வண்ணம்? ஞாயிறு-ஆரஞ்சு; திங்கள்-பச்சை; செவ்வாய்-சிவப்பு; புதன்-நீலம்; வியாழன்-கத்தரிப்பூ; வெள்ளி -அடர் காவி; சனி-கருப்பு என மது பிரியர்களை பல்வேறு வண்ணங்களை கொண்டு குஷிப்படுத்தியுள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.
தமிழகத்தில் டாஸ்மாக் நேற்றைய நிலவரபடி, சுமார் 163 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. இதனையடுத்து, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை என இருந்த நிலையில், இரவு 7 மணி வரை மதுவிற்கலாம் என்ற புதிய அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் மது வாங்க அனுமதி இல்லை! புதுச்சேரி அரசு திட்டவட்ட அறிவிப்பு.
தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும் நாளை முதல் மதுக்கடைகள் திறக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை போலவே, காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என்றும், தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் மது வாங்க அனுமதி இல்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.