Published
2 years agoon
கோவைத்தம்பி தயாரிப்பில் கடந்த 1982ம் ஆண்டு வெளியான படம் பயணங்கள் முடிவதில்லை. இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் முதல் படம் இது. மிக அழகிய பாடல்கள் நிறைந்த படம் இது.
திறமையான பாடகர் கஷ்டப்பட்டு வாய்ப்பு தேடி ஒருவழியாக நல்ல நிலைக்குள் வரும் நிலையில் அவருக்கு கேன்சர் வந்து விடும்.
பின்பு காதலியை புறக்கணிக்க ஆரம்பித்து விடுவார். ஏன் எதற்காக நம்மை புறக்கணிக்கிறார் என காதலியான பூர்ணிமா வாடும்போது இறுதியில் அவருக்கு உண்மை தெரியும் உருக்கமான கதை.
மோகன் நடிப்பில் இளையராஜா இசையில் உருவான பாடல்கள் காலம் கடந்தும் 39 வருடங்களாக நிலைத்து நிற்பது ஆச்சரியமான விசயம்தான்.
இளையநிலா பொழிகிறது, சாலையோரம் சோலை ஒன்று, ராகதீபம் ஏற்றும் நேரம், மணி ஓசை கேட்டு எழுந்து, வைகறையில் போன்ற புகழ்பெற்ற பாடல்கள் இடம்பெற்ற திரைப்படம் இது. அனைத்தும் ஹிட் பாடல்கள்.
வைரமுத்து பாடல்களை எழுதி இருந்தார்.
இப்படத்தை தயாரித்தது அப்போதைய கோவை மாவட்ட அதிமுக செயலாளர் கோவைத்தம்பி அவர்கள். எம்.ஜி.ஆர் வந்து முதல் ஸ்பெஷல் ஷோ பார்க்க வேண்டும் என விரும்பி அவரின் தேதிக்காக காத்திருந்து படத்தை ரிலீஸ் செய்துள்ளார் கோவைத்தம்பி. படம் பார்த்து விட்டு நல்ல முயற்சி என மனமார அனைவரையும் கட்டித்தழுவி பாராட்டினாராம் எம்.ஜி.ஆர்.
இப்படத்தின் மூலம் இயக்குனர் சுந்தராஜன் முன்னணி இயக்குனராகி ஜொலித்தார்.