பவளமல்லி பல மருத்துவ குணங்களை கொண்ட மூலிகை ஆகும். பவள மல்லியின் விதை, பட்டை, இலை ஆகியவை மருத்துவ குணம் கொண்டவை ஆகும்.
பல் ஈறுகளில் வலி இருந்தால் பவளமல்லி மரத்தின் வேர்களை மென்று தின்றால் சரியாகும்.
இதன் விதைகளை பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் சருமம் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் தீரும்.
இரத்தம் அதிகம் இல்லாத இருதய வலுவில்லாத குழந்தைகளுக்கு பவளமல்லி சிறந்தது ஆகும்.
இதன் இலைகளை 200 கிராம் எடுத்து மண்சட்டியில் போட்டு பதமான அனலில் வறுத்து 1 லிட்டர் நீர் விட்டு அரைலிட்டராக சுண்டகாய்ச்சி இரத்தம் அதிகம் இல்லாத இருதய வலுவில்லாத குழந்தைகளுக்கு கொடுக்க நலம் பெறலாம்.