தமிழ்நாட்டில் உள்ள பழமையான ஆதினங்களில் ஒன்றுதான் தருமபுரம் ஆதினம். இந்த ஆதினத்தின் கட்டுப்பாட்டில் 20க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
இந்த தருமபுர ஆதினத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்தது. குருமார்களுக்கு சீடர்கள் கொடுக்கும் மரியாதையே பட்டினப்பிரவேசம். ஆதினமான குருவை சிறிது தூரம் பல்லக்கில் தூக்கி சென்று விடுவதுதான் இந்த விழா.
மனிதனை மனிதனே தூக்கலாமா என்ற அடிப்படையில் இந்த விழாவுக்கு தமிழக அரசால் இந்த விழா தடை செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் மயிலாடுதுறை ஆர்.டி.ஓ பாலாஜி அறிவித்தார்.
இதற்கு மதுரை ஆதினம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக பிஜேபி மற்றும் ஆன்மிக இயக்கங்கள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தாங்களே பல்லக்கை தூக்குவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கூறி இருந்தார். இந்த நிலையில் முதல்வர் வாய்மொழி உத்தரவாக பட்டினப்பிரவேசம் நடத்த அனுமதி கொடுத்து விட்டதாக கூறியுள்ளார் ஆதினம்.