Entertainment
யுகங்கள் கடந்து நிற்கும் பாசமலர்
சிவாஜிகணேசன் நடிப்பில் கடந்த 1961ம் வருடம் இதே நாளில் வெளியான படம் பாசமலர். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி போன்றோர் நடித்திருந்த இப்படத்தை பீம்சிங் இயக்கி இருந்தார்.
நடிகர் திலகமும் , நடிகையர் திலகமும் நடிப்பில் போட்டி போட்டு நடித்து இருந்தனர் இப்படத்தில். அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து எத்தனையோ தமிழ் திரைப்படங்கள் தமிழில் வந்துள்ளன. அதற்கெல்லாம் மூலாதாரம் இந்த படம் என தாராளமாக சொல்லலாம்.
அண்ணன் தங்கை பாசம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என உலகுக்கு சொன்ன படம் இது. காலம் சென்ற இயக்குனர் பீம்சிங் இப்படத்தை அருமையாக இயக்கி இருந்தார்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட் ஆனது.குறிப்பாக மலர்ந்தும் மலராத, பாட்டொன்று கேட்டேன், போன்ற பாடல்கள் பிரபலமான பாடல்களாக இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.
