பார்வதி எதிர்ப்பு- வைரமுத்து விருது பறிக்கப்படுகிறதா

56

கேரளாவில் பாடலாசிரியர் ஓ என் வி விருது என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஓஎன்வி விருது தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு வழங்க கேரள அரசு முடிவு செய்தது.

வைரமுத்து மீது சில மாதங்களுக்கு முன் மீடூ பாலியல் புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது சர்ச்சைகள் எழுந்தது. இதனால் இந்த விருதை கொடுக்க பார்வதி உள்ளிட்ட நடிகைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பார்வதியின் டுவிட்டர் பதிவில் ஓஎன்வி எங்களின் மதிப்புக்குரியவர் அவரின் பெயரில் கொடுக்கப்படும் விருது பாலியல் குற்றச்சாட்டு ஏற்பட்ட ஒருவருக்கு கொடுக்க கூடாது என்று எதிர்ப்பு எழுந்தது.

இதனை வைரமுத்து மீது மீ டூ குற்றம்சாட்டிய சின்மயியும் வழிமொழிந்துள்ளார். இதனால் விருது கொடுக்கலாமா வேண்டாமா என ஆய்வு செய்வதாக ஒஎன்வி விருதுக்குழு முடிவு செய்துள்ளது.

பாருங்க:  கமல், பார்த்திபனை தொடர்ந்து வைரமுத்து என்ன சொன்னார் பாருங்க
Previous articleமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை பரபரப்பு புகார்
Next articleஅமைச்சரின் பாலியல் துன்புறுத்தல்- நடிகை சாந்தினி விரிவான விளக்கம்- வீடியோ