Latest News
பார்த்திவ் படேலின் சுண்டுவிரல் ரகசியம்! ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான பார்த்தீவ் படேல் தனது இடதுகையில் சுண்டுவிரல் இல்லாதது குறித்து ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியில் தோனியின் வருகையால் தங்கள் வாய்ப்புகளை இழந்த இரண்டு முக்கிய வீரர்களாக பார்த்தீவ் படேலும், தினேஷ் கார்த்திக்கும் உள்ளனர். இருவருமே தோனிக்கு முன்ந்தாக அறிமுகமாகி சில போட்டிகளில் விளையாடி தங்கள் திறமையை நிரூபித்து இருந்தாலும் தோனியின் இமாலயத் திறமையால் அவர்களின் தேவை அணிக்கு தேவைப்படவில்லை.
2002 ஆம் ஆண்டிலேயே இந்திய அணிக்காக விளையாடி இருந்தாலும் போதுமான வாய்ப்புகள் இல்லாமல் அதன் பின்னர் ஐபிஎல் போட்டிகளில் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட அணிகளுக்கும் உள்ளூர் போட்டிகளிலும் கவனம் செலுத்தி வரும் பர்தீவ் படேல் இனிமேல் இந்திய அணிக்கு திரும்புவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத காரியமாகி விட்டது. இந்நிலையில் அவரைப் பற்றிய அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பர்தீவ் படேல் தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஒன்பது விரல்களோடுதான் விளையாடினாராம். இதுகுறித்து ‘நான் ஒன்பது விரல்களோடு மட்டுமே கீப்பிங் செய்து வந்தேன். எனக்கு 6 வயது இருக்கும் போது எதிர்பாராத விதமாக கதவிடுக்கில் என் இடது கை சுண்டுவிரல் கதவிடுக்கில் மாட்டி துண்டானது. 9 விரல்களுடன் விக்கெட் கீப்பராக இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் ஆடியது பெருமையளிக்கிறது.
சுண்டுவிரல் இல்லாததால் கீப்பிங் செய்வது கடினமாக இருந்தது. அதனால் டேப் போட்டு ஒட்டிவிட்டுதான் கீப்பிங் செய்வேன். ’ எனக் கூறியுள்ளார்.