சுபஸ்ரீ மரணம் – பார்த்திபன் வெளியிட்ட உருக்கமான வீடியோ

341

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் மரணம் தொடர்பாக இயக்குனரும்,நடிகருமான பார்த்திபவன் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்கிற பெண் மீது விழுந்தது. இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி மரணமடைந்தார். இந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இனிமேல் சாலைகளில் வைக்க வேண்டாம் என அரசியல் கட்சிகள் தங்களின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்டோரும் தங்களுக்கு பேனர்கள் வைக்கக் கூடாது என அவர்களின் ரசிகர்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சுபஸ்ரீ மரணம் தொடர்பாக நடிகர் பார்த்திபன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

பாருங்க:  க்ரீன் பலூன் இல்ல கிரீன் மேங்கோ ரொம்பவே க்ரீன்னா பேசின ஃபேன்ஸ்