ஒத்த செருப்பை போட்டோ எடுங்கள் – பார்த்திபனோடு டின்னர் சாப்பிடுங்கள்

ஒத்த செருப்பை போட்டோ எடுங்கள் – பார்த்திபனோடு டின்னர் சாப்பிடுங்கள்

நடிகரும் இயக்கனருமான பார்த்திபன் தனது ஒத்த செருப்பு திரைப்படத்தை புரமோட் செய்யும் விதத்தில் வித்தியாசமான போட்டியை அறிவித்துள்ளார்.

எதையும் வித்தியாசமாக யோசிக்கும் பார்த்திபன் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ஒத்த செருப்பு. இப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் நடித்திருப்பது போல் திரைக்கதையை பார்த்திபன் அமைத்துள்ளார். இப்படம் சிங்கப்பூரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பாராட்டை பெற்றுள்ளது.

இந்நிலையில், ஒத்த செருப்பை வித்தியாசமாக புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் #OSHO (OTHTHA SERUPPU HAPPENING ONLINE) என்கிற ஹேஷ்டேக்குடன் எனக்கு அனுப்புங்கள் என பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். இதையடுத்து, ஏராளமான பேர் ஒத்த செருப்பை பல கோணங்களில் புகைப்படம் எடுத்து அவருக்கு அனுப்பி வருகின்றனர்.

அவர்களில் பலருடன் மதிய அல்லது இரவு உணவு என பார்த்திபன் அறிவித்துள்ளார்.