Published
11 months agoon
புதிய பாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் பார்த்திபன். அதற்கு முன்பே இவர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்தாலும் புதிய பாதைதான் இவரது முதல் இயக்கம் ஆகும்.
தொடர்ந்து பல படங்களை இயக்கி பார்த்திபன் இன்றும் முன்னணியில் இருந்து வருகிறார். சமீபத்தின் காற்றில் நிழல் என்ற படத்தின் ஆடியோ லாஞ்சில் மைக் வேலை செய்யவில்லை என கோபமடைந்த பார்த்திபன் அதை தூக்கி எறிந்த காட்சிகள் வைரல் ஆனது.
பின்பு அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டு விட்டார். இருப்பினும் பார்த்திபனுக்கு கணக்கு வழக்கு பார்ப்பதற்காக ஒரு அக்கவுண்டண்ட் தேவை என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கணக்கு வழக்கு பார்க்க தெரிந்த அக்கவுண்டன்ட் யாராவது அவரை அணுகலாம். நல்ல வேலை காத்திருக்கிறது.