Entertainment
பார்த்திபன் பட போஸ்டரை வெளியிடும் அமிதாப்
நடிகர் பார்த்திபன் ஒத்த செருப்பு படத்துக்கு பின் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்திற்கு இரவின் நிழல் என பெயர் வைத்துள்ளார்.
பல வருடங்களுக்கு முன் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க ஏலேலோ என்ற படத்தை இயக்க பூஜை போட்டார். அத்தோடு படம் நின்று விட்டது.
நீண்ட நாட்கள் ஏ.ஆர் ரஹ்மானோடு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் இந்த படத்தின் மூலம் பார்த்திபனுக்கு நிறைவேறி இருக்கிறது.
ஆம் இந்த படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று மாலை ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் வெளியிடுகிறார்.
