மேடையில் பேச முடியாமல் அழுத பார்த்திபன் – நெகிழ்ச்சி வீடியோ

மேடையில் பேச முடியாமல் அழுத பார்த்திபன் – நெகிழ்ச்சி வீடியோ

ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு கிடைத்த பாராட்டு அப்படத்தின் இயக்குனர் பார்த்திபனுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதையும் வித்தியாசமாக யோசிக்கும் பார்த்திபன் சில சமயம் பரிசோதனை முயற்சிகளையும் மேற்கொள்வார். அப்படி அவர் முயற்சி செய்த குடைக்குள் மழை, ஹவுஸ்புல், இவன், கோடிட்ட இடத்தை நிரப்புக உள்ளிட்ட திரைப்படங்கள் தோல்வி அடைந்தன. ஆனால், கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றியை பெற்றது.

பார்த்திபன் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ஒத்த செருப்பு. இப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் நடித்திருப்பது போல் திரைக்கதையை பார்த்திபன் அமைத்துள்ளார். இப்படம் சிங்கப்பூரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பாராட்டை பெற்றுள்ளது. அந்த விழாவில் பேசிய பார்த்திபன் ஒரு கட்டத்தில் பேச்சை தொடர முடியாமல் விக்கித்து நின்றார். அதன்பின், நான் பின்னர் பேசுகிறேன் எனக்கூறிவிட்டு சென்றுவிட்டார்.

அந்த வீடியோவை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.