என் ஏழாம் அறிவை செருப்பால் அடிக்கணும் – பார்த்திபன் கோபம்

229

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ள டிவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்த்திபன் இயக்கத்தில் அவர் மட்டுமே நடித்து உருவான ஒத்த செருப்பு திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. வித்தியாசமான கோணத்தில் கதை சொல்லப்பட்டிருப்பது பல ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆனாலும், இத்திரைப்படம் சில இணையதளங்களில் வெளியாகிவிட்டது.

இந்நிலையில், பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இப்படிப் பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்துபோடுவதும், பார்ப்பதும் அருவருப்பான செயல்!

ஒத்த செருப்பு பத்தாது.. ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை!இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியாயன்னு!

தியேட்டரில் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது’ என பதிவிட்டுள்ளார்.

 

பாருங்க:  இணையத்தில் பரவும் வதந்தி- ப்ளீஸ் எங்களை காயப்படுத்த வேண்டாம்- எஸ்.பி.பி சரண்