கோவிட் 19 என்ற கொரோனா காலத்திற்கு பிறகு தற்போதுதான் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. கடந்த ஜனவரியில்தான் தமிழ்நாட்டில் புதிய படங்களின் வரவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தீபாவளிக்கே தியேட்டர்கள் தொடங்கப்பட்டாலும் அவ்வளவாக படங்கள் இல்லாமல் வறட்சியாகத்தான் இருந்தது.
தற்போதுதான் பெரும் முன்னேற்றமாக உள்ளது. மாஸ்டர் படம் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடி வரும் வேளையில் சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ் திரைப்படமும் இன்று முதல் தியேட்டரில் வருகிறது.
இப்படத்தை ஏ1 படத்தை இயக்கிய ஜான்சன் இயக்கியுள்ளார்.