இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சில வருடங்கள் முன்பு வெளிவந்த திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்த திரைப்படத்தில் கதாநாயகன் கதிரின் அப்பாவி அப்பாவாக நடித்தவர் தெருக்கூத்து கலைஞர் தங்கராசு.
இவரது குடும்பம் வறுமையில் வாடுவதால் அதை நெல்லை கலெக்டரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதை பார்த்த நெல்லை கலெக்டர் விஷ்ணு தங்கராசு குடும்பத்துக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளார்.
அவரது மகளுக்கு கலெக்டர் அலுவலத்தில் தற்காலிக பணியும் தங்கராசுவுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடும் வழங்கி உத்தரவிட்டுள்ளார் கலெக்டர்