Latest News
பன்னீர் செல்வத்துக்கு ஆறுதல் சொன்ன டிடிவி தினகரன்
அதிமுகவின் தற்போதைய ஒருங்கிணைப்பாளராகவும், முன்னாள் நிதி அமைச்சராகவும், முதல்வராகவும், துணை முதல்வராகவும் பல்வேறு பதவிகளை வகித்தவர் ஓ. பன்னீர்செல்வம். இவரின் மனைவி விஜயலட்சுமி நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். இதற்கு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் ஓபிஎஸ்க்கு நேரில் ஆறுதல் கூறினர்.
யாரும் எதிர்பாராத வகையில் சசிகலா பன்னீர்செல்வத்துக்கு நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதிமுகவின் பெரும் மாற்றத்தையே ஏற்படுத்திய பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் தியானத்துக்கு பிறகு சசிகலாவும், பன்னீர்செல்வமும் சந்தித்து கொள்ளவே மாட்டார்கள் என்ற நிலை மாறி நேற்று இருவரும் சந்தித்துக்கொண்டனர்.
இந்த நிலையில் பெரியகுளத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு அமமுகவின் டிடிவி தினகரனும் வந்து அஞ்சலி செலுத்தி சென்றுள்ளார். இதுதான் இப்போதைய ஹாட் டாபிக் ஆக உள்ளது.
