பன்னீர் புஷ்பங்கள் படம் வந்து 40 ஆண்டுகள்- இயக்குனர்கள் நெகிழ்ச்சி

17

பன்னீர் புஷ்பங்கள் படம் வந்து கடந்த ஜூலை 3 உடன் 40 ஆண்டுகள் நிறைவடைகிறதாம். ஜூலை 3 ம் தேதி கடந்த 1981ல் வெளியான இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை இயக்கியவர்கள் பாரதி வாசு. இவர்கள் வேறு யாருமல்ல இயக்குனர் சந்தானபாரதியும் இயக்குனர் பி வாசுவும்தான். இவர்கள் இருவரும் இணைந்துதான் தங்கள் பெயரை சேர்த்து பாரதி வாசு என ஆக்கி கொண்டனர். இவர்கள் இரட்டை இயக்குனர்களாக இப்படத்தில் வேலை பார்த்தனர்.

ஊட்டியிலும், சென்னையிலும் சேர்த்து வெறும் 21 நாட்களில் இப்படத்தை முடித்துள்ளனர் இவர்கள். நிறைய பிலிம்களை வேஸ்ட் செய்யவில்லையாம் இவர்கள். சுரேஷுக்கு அப்போ 15 வயது நாயகி சாந்தி கிருஷ்ணாவுக்கு 14 வயது . படத்தின் வெற்றிக்கு பெரிதும் துணை நின்றது இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள் என்று இயக்குனர்கள் இருவரும் அதை நினைவு கூர்கின்றனர்.

பாருங்க:  எம்.ஜி.ஆர் கெட் அப்பில் அரவிந்த்சாமியின் அசத்தலான தலைவி பட போஸ்டர்கள்
Previous articleபாடநூல் கழகதலைவர்- லியோனி பெருமிதம்
Next articleதமிழக பிஜேபி யங் லீடர் அண்ணாமலை- பாஜகவினர் வரவேற்பு