கடந்த 1989ம் ஆண்டு இதே நாளில் வெளியான திரைப்படம் நெத்தி அடி. இதில் பாண்டியராஜன், அமலா, வைஷ்ணவி, செந்தில், ஜனகராஜ் மற்றும் பலரானோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்துக்கு பாண்டியராஜன் இசையமைத்திருந்தார். பாண்டியராஜன் தனது வழக்கமான சேட்டைகளால் அனைவரையும் சிரிக்க வைத்தார் என்றே சொல்லலாம்.
கல்யாண வீட்டில் சமையல் கலாட்டா, இறந்த வீட்டில் பாண்டியராஜன் ,ஜனகராஜ் செய்யும் கலாட்டா என இப்படத்தில் காமெடிக்கு குறைவில்லாது களை கட்டியது.
இறந்தவர் பற்றிய தகவலை சொல்ல செல்லும் பாண்டியராஜன் ஊர் ஊராக சுற்றி, ரஜினி, கமல் படங்களை பார்த்து விட்டு வருவதாக காட்சிகள் அமைந்திருக்கும்.
வைஷ்ணவி உடனான காதல் எதிர்ப்பு, அமலாவுடன் ரொமான்ஸ் என பாண்டியராஜனின் சேட்டைகள் அனைவரையுமே ரசிக்க வைத்தது. இப்படம் இணையத்தில் பார்க்க கிடைக்கிறது. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இப்படம் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படமாகும்.