Latest News
பழனியிலும் சூரசம்ஹார விழா- பக்தர்களுக்கு தடை
முருகப்பெருமான் சூரனை வதம் செய்த இடமாக கருதப்படும் இடம் திருச்செந்தூர். இங்கு சூரசம்ஹார விழா பெரிய அளவில் நடைபெறும். இங்கு மட்டுமல்லாது முருகனின் அறுபடை வீடுகளிலும் சூரசம்ஹார விழா நடைபெறும்.
இந்த முறை திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது போல் பழனியிலும் இவ்விழாக்களில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் கந்த சஷ்டி விரதம் தொடங்குகிறது நாளை முதல் 10-ம் தேதி வரை கந்த சஷ்டி திருவிழா நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவர் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது.