Connect with us

பழனி பஞ்சாமிர்தம் வீட்டிலேயே செய்வது எப்படி

Entertainment

பழனி பஞ்சாமிர்தம் வீட்டிலேயே செய்வது எப்படி

பார்த்த உடன் வாயூற செய்வது பழனி பஞ்சாமிர்தம். இனிப்பு பிரியர்களுக்கு பழனி பஞ்சாமிர்தம் என்றால் கொள்ளை ஆசை . பழனியில் மட்டுமே பஞ்சாமிர்தம் புகழ்பெற்றது என்றாலும் அந்த சுவைக்கு எப்படி வீட்டிலேயே பஞ்சாமிர்தம் செய்யலாம் என பார்ப்போம்.

இதற்கு தேவையான பொருட்கள்

மலை வாழைப்பழம்- கிடைக்கவில்லை என்றால் சாதாரண வாழைப்பழம் 6

பேரீச்சை – 20
காய்ந்த திராட்சை – கால் கப்
தேன் – 1/2 கப்,
நெய் – 2 டீஸ்பூன்
வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை – அரை கப்
பனங்கற்கண்டு – கால் கப்
ஏலக்காய் – 2

*பேரிச்சம் பழத்தை சிறிது சிறிதாக பொடியாக நறுக்கி கொள்ளவும்

*ஏலக்காயை பொடி செய்து வாழைப்பழத்தை நன்றாக மசித்துக்கொள்ளவும்

*அகன்ற ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம், பேரிட்சை, காய்ந்த திராட்சை,தேன், நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு, ஏலக்காய் பொடித்தது போட்டு பிசைந்து கொள்ளவும்.

பிறகு அதில் நெய் சேர்த்து முருகனுக்கு படைத்து விட்டு நீங்களும் சாப்பிடலாம்.

More in Entertainment

To Top