Tamil Flash News
பழனி – துப்பாக்கியால் சுடப்பட்டவர் பலியானதால் தியேட்டர் உரிமையாளர் மீது கொலை வழக்கு
பழனி நகரின் முக்கிய தியேட்டர்களில் ஒன்று வள்ளுவர் தியேட்டர். இந்த தியேட்டரை தெரியாதவர்கள் இந்த பகுதியில் இருக்க மாட்டார்கள் அந்த அளவு பிரபலமானது வள்ளுவர் தியேட்டர்.
இந்த தியேட்டரின் உரிமையாளர் நடராஜன். வயோதிக நிலையில் உள்ள நடராஜன் சில வருடங்கள் முன்பு வாங்கிய ஒரு சொத்து விசயமாக இவரது நண்பர்களான பழனிச்சாமி மற்றும் சுப்பிரமணிக்கு பிரச்சினை இருந்து வந்தது.
இது கோர்ட்டுக்கு சென்று சுப்பிரமணி, பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பும் வழங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நடராஜன் நேற்று இருவரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து லைசென்ஸ் பெற்று தான் வாங்கி வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுட்டார்.
இதில் மயங்கி விழுந்த சுப்ரமணி மதுரை அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார் இந்த நிலையில் சுப்ரமணி இன்று மரணமடைந்ததால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
வள்ளுவர் தியேட்டர் உரிமையாளர் நடராஜன் கைது செய்யப்பட்டு காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளார்.