Connect with us

Entertainment

பிரிவினையின்போது பாகிஸ்தான் சென்றவர்களுக்கு அங்கு கவுரவமில்லை- மோகன் பாகவத் அதிரடி

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவிலருந்து பாகிஸ்தான் சென்ற முஸ்லிம்களுக்கு மரியாதையும், கவுரவமும் இன்னும் கிடைக்கவில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

டெல்லியில் வீர சவார்க்கர் குறித்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது
இந்தியாவின் பழங்கால கலாச்சாரமான இந்துத்துவா, சனாதன தர்மா ஆகியவை சுதந்திரமானவை. இந்தக் கலாச்சாரத்தை நாம் தலைமுறைகளாக வளர்த்து வருகிறோம். வழிபாட்டை அடிப்படையாக வைத்து யாரும் இதைப் பிரித்துப் பார்க்கவில்லை. இந்துக்களின், முஸ்லிம்களின் மூதாதையர்கள் ஒன்றுதான். இந்த சிந்தனை மட்டும் சுதந்திரப்போராட்டத்தின்போது அனைவரின் மனதில் இருந்திருந்தால், அப்போதே இந்தியா பிளவுபடுவதைத் தடுத்திருக்கலாம்.

வீர சவர்க்கார் ஒரு தேசியவாதி, தொலைநோக்குடையவர். சவார்க்கரின் இந்துத்துவா என்பது ஒருங்கிணைந்த இந்தியாதான், மதம், சாதி, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் யாரையும் பாகுபாடுகாட்டக்கூடாது என்பதுதான் அவருடைய சித்தாந்தம். இதுதான் இந்த தேசத்தின் அடிப்படை.

சவார்க்கர் ஒருமுறை கூறுகையில், இந்தியாவை ஆள வேண்டுமானால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தினால்தான் முடியும் என்றுபுரிந்து கொண்டனர். அதனால்தான் அவர்கள் பிரிவினையை ஏற்படுத்த அதிகம் முயன்றனர். அந்தமான் சிறையிலிருந்து சவார்க்கர் வந்தபின் எழுதிய புத்தகத்தில், பல்ேவறு விதமான மதவழிபாடுகள் இருந்தாலும் இந்து தேசியவாதம் ஒன்றுதான் என்று எழுதினார். தேசத்தைப் பிரித்தால்தான் கொள்ளையடிக்க முடியும், ஆள முடியும் என்று ஆங்கிலேயர்கள் நம்பினர்.

இந்திய சமூகத்தில் பலரும் இந்துத்துவா, ஒற்றுமை குறித்துப் பலரும் பேசுகிறார்கள். ஆனால், சவார்க்கர் இதை சத்தமிட்டு பேசினார். இப்போது பல ஆண்டுகளுக்குப்பின், அதை உணர்ந்த நாம், நாட்டில் எந்தப் பிரிவினையும் வந்துவிடக்கூடாது என்று ஒவ்வொருவரும் அவர் கூறிய சத்தமிட்டு கூறுகிறோம்.

பாருங்க:  ஏப்ரல் 23 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

 

Entertainment

பேரன்களுடன் அண்ணாத்த படம் பார்த்த ரஜினி

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படம் வரும் நவம்பர் 4ம் தேதி திரைக்கு வருகிறது. தீபாவளி திருநாளில் வெளியாகும் இப்படத்துக்கு பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு (27.10.2021) அண்ணாத்த படத்தை பார்த்துள்ளார். படம் முடிந்த பிறகு ரஜினியின் பேரன் கட்டிப்பிடித்ததை நெகிழ்ச்சியாக ரஜினிகாந்த் Hoote சமூக வலைதளம் மூலம் குரல் பதிவாக பகிர்ந்துள்ளார். முழு குரல் பதிவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  ஆனைகட்டி அருகே யானைக்கு ஆந்த்ராக்ஸ்
Continue Reading

Entertainment

பாலா பற்றி திடீரென வாய் மலர்ந்த சூர்யா

நடிகர் சூர்யா நடிகர் சிவக்குமாரின் வாரிசு என்றாலும் ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை. சூர்யாவும் என்னென்னவோ நடித்து பார்த்தார். விக்ரம் பட்ட கஷ்டம் போல சூர்யாவும் படாத கஷ்டமில்லை இருந்தாலும் சினிமாவில் முன்னேற்றமில்லாமல் இருந்தார்.

இயக்குனர் பாலா சேது முடித்து அந்த வெற்றிக்களிப்பில் இருந்த கையோடு அடுத்த படமாக நந்தாவை துவக்கினார். இதில் சூர்யாவுக்கு சிறப்பான வேடம் கொடுத்தார்.

இந்த படத்தின் மூலம் சூர்யாவின் சினிமா வாழ்க்கை மாறியது. அடுத்த மாதம் 14ம் தேதியுடன் சினிமாவின் தன் வெற்றியை சூர்யா துவக்கி 20 வருடங்கள் ஆகிறது.

இந்நிலையில் என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்… அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன் என சூர்யா கூறியுள்ளார்.

பாருங்க:  எஸ்.பிபியின் இறுதி சடங்குகள் தொடங்கியது
Continue Reading

Entertainment

புஷ்பா படத்தின் சாமி சாமி லிரிக்கல் வீடியோ

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புஷ்பா படத்தின் சாமி சாமி என்ற லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

பாருங்க:  சர்ச்சை கிளப்பிய சுற்றறிக்கை - மாநகராட்சி துணை ஆணையர் விடுவிப்பு
Continue Reading

Trending