கொரோனா பரிசோதனை செய்துகொண்ட பிரதமர்! அதிர்ச்சியில் மக்கள்!

கொரோனா பரிசோதனை செய்துகொண்ட பிரதமர்! அதிர்ச்சியில் மக்கள்!

கொரோனா சோதனை செய்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 25,00,000 லட்சம் பேருக்கு, ஏழை பணக்காரர், பாமரர் பதவியில் இருப்பவர் என்ற வேறுபாடு இன்றி அனைவரையும் தாக்கி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் உள்பட பல சர்வதேச பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும்,  அதன் பின் கொரோனா இம்ரான்கான் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.  இருப்பினும் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இம்ரான் கான் சந்தித்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதால் இப்போது அவருக்கு இந்த சோதனை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.