இயக்குனர் சசிக்குமார் நடிப்பில் இறுதியாக வந்த படம் நாடோடிகள் 2. அதன் பின்பு எந்த படமும் வரவில்லை இருப்பினும் சசிக்குமார் அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.
கொம்பு வச்ச சிங்கம்டா, பரமகுரு, எம்.ஜி.ஆர் மகன் நா நா, ராஜவம்சம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்து வரும் நிலையில் ஒரு படமும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
இதனிடையே பரபரப்பாக புதிய பட டைட்டில் ஒன்று வெளியாகியுள்ளது. அதுதான் இவர் நடிப்பில் உருவாக இருக்கும் பகைவனுக்கு அருள்வாய் திரைப்படம்.
இதில் சசிக்குமார் துப்பாக்கி தூக்கி நடிக்கிறாராம். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தை அனிஸ் இயக்குகிறார். மன்கி ஸ்டுடியோ இப்படத்தை தயாரிக்கிறது.