இந்தியாவில் சமையல் சிலிண்டர்கள் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஹோட்டலுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களின் விலை 268 ரூபாய் அதிகரித்துள்ளது.
இது போக பெட்ரோல், டீசல் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. பெட்ரோல் இன்று லிட்டருக்கு 109 ரூபாய் விற்கிறது.
இந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இது குறித்து கூறியுள்ளதாவது,
எட்டு ஆண்டுகளில் எரிபொருள் வரியாக 26,51,919 கோடி எரிபொருள் வரியாக அரசு வசூலித்துள்ளது.
ஒவ்வொரு சாமானிய மக்களும் இதற்காக ஒரு லட்சம் செலுத்தியுள்ளனர்.
ஒரு சராசரி குடும்பம் இவ்வளவு வரியை செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது என நீங்களே கேட்டுப்பாருங்கள் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.