Published
2 years agoon
சில வருடங்களுக்கு முன் ஓவியா பிக்பாஸில் கலந்து கொண்டார். அந்த நேரத்தில் ஓவியாவின் பெயர் வராத நாளே இல்லை எனலாம். காதல் சர்ச்சைகளும் இவரை துரத்தியது. ஒரு வழியாக அவற்றில் இருந்து எல்லாம் வெளியேறிய ஓவியா தற்போது பிரதமர் மோடியை எதிர்த்து டுவிட்டர் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு கோ பேக் மோடி டுவிட்டர் எல்லாம் வெளியிட்டு பிரச்சினையில் சிக்கிய ஓவியா, தற்போது டெல்லியில் மோடியை எதிர்த்து போஸ்டர் ஒட்டப்பட்ட சிலர் கைது செய்யப்பட்டதற்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அரெஸ்ட் மீடு என்ற ஹேஷ்டேகை இவரும் ட்ரெண்ட் செய்து உள்ளார்.
Is this democracy or democrazy ???#ArrestMeToo
— Oviyaa (@OviyaaSweetz) May 16, 2021