கடும் சிக்கலில் ஓவியா

11

இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். பிரதமர் மோடி சென்னை வரும்போதெல்லாம் எதிர்க்கட்சிகள் மற்றும் பிரதமரை பிடிக்காத அமைப்பினர்கள் சேர்ந்து கோ பேக் மோடி என சொல்வதும் அதை டுவிட்டரில் ட்ரெண்ட் செய்வதும் வழக்கம்.

அதை இந்த முறையும் நேற்றிலிருந்து செய்து வருகிறார்கள். இதை சாதாரண நபர்கள் செய்திருந்தால் பரவாயில்லை. மிக புகழ்பெற்ற நடிகை ஓவியா செய்திருப்பதுதான் நெருடலாக உள்ளது.

இதுவரை பிரகாஷ்ராஜ், சித்தார்த் என பல பிரபலங்கள் கூட பிரதமரின் ஆட்சியை பிடிக்காவிட்டால் விமர்சனம் மட்டுமே செய்து இருக்கிறார். இது போல கோ பேக் மோடி டுவிட்டரை ட்ரெண்ட் செய்தது இல்லை.

ஓவியா இப்படி டுவிட்டரை போட்டதில் இருந்து சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் நிலவுகிறது. பாரதிய ஜனதாவினர் மற்றும் ஆதரவாளர்கள் ஓவியாவை கடுமையாக தாக்கி எழுதி வருகின்றனர். அதே நேரத்தில் மோடி எதிர்ப்பாளர்கள் அவருக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

https://twitter.com/OviyaaSweetz/status/1360494760364892166?s=20

பாருங்க:  தமிழகத்துக்கு எந்த திட்டமும் கிடைக்காது - பிரேமலதா ஆவேசம்