Entertainment
கட்டுக்கடங்காமல் கூட்டம் சேரும் கேஜிஎஃப் 2- புத்தாண்டு படத்தில் கேஜிஎஃப் 2 தான் டாப்
கடந்த வாரம் புத்தாண்டு தினத்துக்காக வெளியான படங்கள் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 திரைப்படங்களாகும். இதில் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் நடித்திருந்ததாலும் சன் பிக்சர்ஸ் அப்படத்தை தயாரித்து இருந்ததாலும் படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது ஆனால் படம் வந்த உடனே பெரிய அளவில் மக்களிடம் எடுபடாமல் போனது.
அதே நேரத்தில் கேஜிஎஃப் 2 படம் கன்னட டப்பிங் படம்தான் இருந்தாலும், கேஜிஎஃப் 1 வெற்றி பெற்ற காரணத்தால் கேஜிஎஃப் 2வுக்கு அதிகம் பேர் செல்ல தொடங்கினார் படமும் நன்றாக இருப்பது ஒரு காரணம் , மற்றொரு காரணம் என்னவென்றால் பீஸ்டை தவிர எந்த படமும் வெளிவராததும் ஒரு காரணம்.
நன்றாக இருக்கும் டாணாக்காரன் திரைப்படம் கூட ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்று வருவதாலும் வேறு சரியான எந்த படமும் தியேட்டரில் ஓடாததாலும் கேஜிஎஃப் 2 திரைப்படத்தை ரசிகர்கள் மொய்த்து வருகின்றனர்.
சிறு நகரங்கள், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் சிறு தியேட்டர்களில் கூட கேஜிஎஃப் 2க்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதுதான் ஆச்சரியமான விசயம் எல்லா ஷோவும் நிரம்பி வழிகிறது என்பதும் ஆச்சரியமான விசயம்.
