திண்டுக்கல் மாவட்டம் பழனி செல்லும் வழியில் ஒட்டன்சத்திரம் உள்ளது. மிக அழகிய ஊரான இந்த ஊரில்தான் தென்னகத்திலேயே பெரிய அளவிலான காய்கறி மார்க்கெட் உள்ளது.
இந்த ஊருக்கு அருகே உள்ள சே.கீரனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகாலை 2 மணி அளவில் நில அதிர்வும் 4 மணி அளவில் டம் டம் என்று சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இந்நிலையில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்பட்ட இடங்களை தாசில்தார் முத்துசாமி பார்வையிட்டார்.