Entertainment
இன்று ஓடிடியில் வெளியாகும் படங்கள்
ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டுக்கு எத்தனையோ சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகியுள்ளது. சில வருடங்களாக ஓடிடி தளத்தில் படங்கள் வெளியாக ஆரம்பித்து விட்டன.
இந்த நேரத்தில் கொரோனாவும் சேர்ந்து கொள்ள பல தயாரிப்பாளர்களுக்கு ரொம்பவும் வசதியாக போய்விட்டது.
சில மாதங்களாகவே ஓடிடியில் படங்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதால் பல படங்கள் தியேட்டரில் வராமல் ஓடிடியில் ரிலீஸ் ஆகின்றன.
சன் எண்டர்டெயின் மெண்ட் தயாரித்துள்ள வணக்கம்டா மாப்ள இன்று டிவியில் நேரடியாக ரிலீஸ் ஆக இருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டு இப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இது போல் த்ரிஷா நடித்த பரமபத விளையாட்டு, கே.எஸ் ரவிக்குமார் நடித்துள்ள மதில் படமும் இன்று ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது.
