ஐயா படத்தின் மூலம் திரையில் அறிமுகமானவர் நயன் தாரா. முதல் படத்திலேயே நல்ல அறிமுகத்தை பெற்றாலும், அடுத்து நடித்த சந்திரமுகி படமே மிகப்பெரும் பெயரை பெற்றுக்கொடுத்தது. குறுகிய காலத்திலேயே சூப்பர்ஸ்டாருடன் நடித்தார்.
மிக வேகமாக வளர்ந்துவிட்ட நடிகையான இவர் குறுகிய காலத்திலேயே சிம்பு, பிரபுதேவா போன்றோர்களுடன் காதல் வயப்பட்டு அந்த காதலும் கை கூடவில்லை.
இந்த நிலையில் நானும் ரவுடிதான் படத்தின் மூலம் அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டது. நீண்ட நாட்களாக லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வரும் இவர்கள் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்து வரும் 9ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் என்று அறிவிக்கவும் செய்துவிட்டனர்.
இந்நிலையில் நயன் தாரா , விக்னேஷ் சிவன் இருவரின் திருமணத்தையும் நெட்ப்ளிக்ஸ் இணையதளம் ஒளிபரப்புகிறது. இதற்காக 2 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு, இயக்குனர் கெளதம் மேனனின் மேற்பார்வையில் திருமண படப்பிடிப்பு நடைபெறுகிறது.