ஓடிடியில் வெளியாகும் நாரப்பா

50

கடந்த 2019ல் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் அசுரன். இப்படத்தை வெற்றி மாறன் இயக்கினார். பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் முதன் முறையாக நடித்தார்.

இப்படம் நல்லதொரு வரவேற்பை பெற்ற படமாக வந்தது. அனைத்து தரப்பினரும் தனுஷ், மஞ்சு வாரியரின் நடிப்பை புகழ்ந்தனர்.

இந்த நிலையில் இப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் வெங்கடேஷ், பிரியா மணி நடித்தனர். இந்த படத்தின் பெயர் நாரப்பா. இந்த படம் தற்போதைய கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளால் தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியாகிறது.

நாராப்பா’ படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஜூலை மாதத்தில் வெளியாகும் எனவும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

பாருங்க:  இயக்குனர் கார்த்திக் ரகுநாத் ஒரு பார்வை- ப்ளாஷ்பேக்
Previous articleஅபர்ணா- அசோக் செல்வன் இணையும் படம்
Next articleஎஸ்.பி.பிக்காக தெலுங்கு ரசிகர்கள் செய்த காரியம்